நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானல் தொடர்ந்து படியுங்கள்....
எழுத்தாளரும் பட இயக்குநருமான ஞாநி, நிறுவனராகவும்நிர்வாக அறங்காவலராகவும் இருந்து தொடங்கியிருக்கும் கோலம்அறக்கட்டளையின் நோக்கங்கள்:
கலை இலக்கியத்துறைகளில் மனித நேய மதிப்பீடுகளையும் தீங்கற்ற பொழுதுபோக்கு அம்சங்களையும் ஊக்குவிப்பதற்கான, கலை இலக்கிய படைப்புகளை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.
ஓவியம் சிற்பம் போன்ற நுண் கலைகள், நாடகம், நடனம் போன்ற நிகழ்கலைகள், சின்னத் திரை, பெரிய திரை போன்ற அறிவியல் சார்ந்த கலைகள், புது ஊடகமான இணையம் போன்ற துறைகளில் படைப்புகளை உருவாக்குவதும் இலக்கியத்துறையில் பதிப்பு, அச்சு சார்ந்த படைப்புகளை வெளியிடுவதும் எமது நோக்கமாகும்.
மேற்கண்ட துறைகளில் மனித நேய மதிப்பிடுகளை ஊக்குவிப்பதற்காக நம்பகத்தன்மை உடைய படைப்புகளை தயாரித்தல், தயாரிக்க உதவுதல், தயாரிப்புப் பணிகளை ஒப்படைத்தல் ஆகியவற்றில் இப்போதுள்ள ஆற்றல் மிக்க படைப்பாளிகளையும் ஆற்றல் மிக்க புதிய படைப்பாளிகளையும் ஈடுபடுத்துவது எமது நோக்கமாகும்.
இவற்றை எமது சக்திக்கும் உருவாகும் ஆதரவுக்கும் ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவோம். |